BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

திங்கள், 21 ஏப்ரல், 2014

குப்பிற விழுந்தாலும் . . . . . . . . .


       கோவை  RGB  தேர்தலில் எங்கள் உறுப்பினர்களைவிட  அதிக வாக்குகள் வாங்கியதாக தம்பாட்டம் அடிக்கும் கோவை கோயாபல்ஸ்களே  உங்கள்  முன்னால் மாவட்டசெயலர்  தோழர். தனுஷ்கோடி பெற்ற வாக்குகள் 98  அப்படியானல் உங்கள் உறுப்பினர் எண்ணிக்கை 98 க்கும் குறைவுதானா ? உண்மையை இப்பொழுதாவது ஒப்புக்கொண்டதற்கு  எங்கள் வாழ்த்துக்கள்.

     எங்களை வாழ்த்த மனமில்லாவிட்டாலும் வசைபாடமல்  இருக்க முயற்சி செய்யுங்கள்  மக்கள் தீர்ப்பை  மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் இனி உங்களுக்கு அடி மேல் அடிதான்.

சனி, 19 ஏப்ரல், 2014

கோவை கருத்தரங்கம் புகைப்படங்கள்

View all
Get your own

திறந்த வெளி கருத்தரங்கம்

   தமிழ் மாநில சங்கம் சார்பாக ராஜ்கோட் மத்திய செயற்குழுவில் எடுத்த முடிவின்படி திறந்த வெளி கருத்தரங்கம் மாநில தலைவர் தோழர் K.மாரிமுத்து தலைமையில் கோவை மத்திய தொலைபேசி நிலைய வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் கோவை மாவட்ட செயலர் தோழர் ராஜேந்திரன் வரவேற்று உரை ஆற்றினார். மத்திய தொழிற்சங்கங்களின் 10 அம்ச கோரிக்கைகளும், அதற்கான போராட்டங்களும் என்ற தலைப்பில் உரையாற்றிய நமது மாநில செயலர் தோழர் S செல்லப்பா அவர்கள் தன் உரையில் பொதுத்துறை உருவான வரலாற்றையும்,பொதுத்துறை நிறுவனங்கள் தன்  லாபத்தில் அரசுக்கு அளித்த மிக பெரிய பங்களிப்பையும் சுட்டி காட்டினார். உலகமயமாக்கல் ,தனியர்மயமாக்கல் கொள்கையை அமல்படுத்தும் தற்போது உள்ள காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும்  அதற்கு முந்திய  பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி  அரசும்  பொது துறையை சீரழிக்கும் கொள்கையை கடைபிடிப்பதையும் அதை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் 1991 முதல் இதுவரை நடத்திய 16 வேலை  நிறுத்த போராட்டங்களிலும் நமது BSNLEU சங்கம் பங்கேற்றதின் விளைவாகத்தான் இன்று வரை 1% பங்குகள்கூட விற்கப்படாமல் நமது BSNL நிறுவனம்  காக்கக்பட்டு உள்ளதை நினைவூட்டினார். மேலும் ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியமாக  ரூபாய் 10,000/- வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் 10 அம்ச கோரிக்கையில் உள்ளதை சுட்டி காட்டினார். மத நல்லிணக்கமும் தொழிலாளி வர்க்க கடமையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர்  தோழர் P சம்பத் தன் உரையில் இந்தியாவின் பிரிவினைக்கு காரணமான மதவாத சக்திகளின் போக்கை வரலாற்று சான்றுகளுடன் சுட்டி காட்டினார். தேச தந்தை மகாத்மாவின் படுகொலைக்கு காரணமான மதவாத சக்திகள் மீண்டு எழுவது தேச நலனுக்கு  மிக ஆபத்து என்பதையும்,  இந்தியாவில் மதவாத சக்திகளுக்கு எதிராக உறுதியாக போராடக்  கூடிய ஒரே அமைப்பு இடதுசாரிகள் மட்டுமே என்பதை அவர் ஆணித்தரமாக கூறினார்பாபரி மசூதி தாக்கபட்ட நேரத்தில் இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்களில் மட்டுமே  சிறுபான்மை இனத்தவர் மீது தாக்குதல் நடைபெற வில்லை என்பதை அவர் கூறினார். அதன்பின் தாராள மயமாக்கல் கொள்கையும், தொலை தொடர்பு கொள்கையும் என்ற தலைப்பில் உரையாற்றிய நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் தாராளமய கொள்கையால், பொதுதுறை நிறுவனங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதையும், இக்கொள்கையால் அரசு துறையில்  ஊழல் புரையேடி போகும் அவலத்தையும் சுட்டி காட்டினார். கடந்த 2014 பிப்ரவரி மாதம் முதல் 30,000 கோடி ரூபாய் அந்நிய நாட்டு பணம்  இந்திய பங்கு சந்தையில் முதலீடாக கூடியதன் நோக்கம் பற்றியும் ,குஜராத் மாநிலத்தில் பெண்கள் பெருமளவில் ரத்த சோகை நோயால்  அவதிப்படுவதையும், அந்த மாநில அரசு தினமும் 10 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வறுமை கோட்டிற்கு மேல் வாழ்வதாக கூறுவதின்  அவலத்தையும் சுட்டி காட்டினார். கார்போரேட்  நிறுவனங்களும், அவைகளின் பெரும்பாலான ஊடகங்களும்  மோடியை தூக்கி நிறுத்துவதன் நோக்கத்தை அவர்   எடுத்துரைத்தார். ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் முடிவின்படி அனைத்து மாநிலங்களிலும் இக்  கருத்தரங்கம் வெற்றிகரமாய்   நடை பெறுவதை சுட்டி காட்டினார். நிலுவையில் உள்ள  கோரிக்கைகளுக்காக அனைத்து சங்கங்களும் இணைந்து போராட உள்ள சூழலையும் அவர் கூறினார். தோழர் வெங்கட்ராமன் நன்றியுரை கூற கருத்தரங்கம் இனிதே முடிவுற்றது.

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

BSNLEU வின் - RGB தேர்தலில் வெற்றி நடை தொடர்கின்றது  நன்றி ! நன்றி ! நன்றி

பண பலம், ஊழல், பொய்பிரச்சாரங்களுக்கு  கோவை மாவட்ட ஊழியர்கள் என்றைக்கும் ஆதரவு தரமாட்டார்கள் என்பதை    மீண்டும் நிரூபிக்கும் வகையில் 17-04-2014 அன்று நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தேர்தலில்   BSNLEU- SEWA BSNL  கூட்டணி வேட்பாளர்களை  பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில்  சங்க வித்தியாசமின்றி வாக்களித்து 15  வேட்பாளர்களையும்  வெற்றி பெறச்செய்த அனைத்து தோழர்களுக்கும் ,தோழியர்களுக்கும் மாவட்ட  சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

ஈரோட்டில் நடைபெற்ற தேர்தலில் 8 க்கு 6 இடங்களில் நமது கூட்டனி வெற்றி பெற்றுள்ளது.  ஈரோடு மாவட்ட சங்கத்திற்கு  நமது வாழ்த்துக்கள்
.

கருத்தரங்கம்

BSNL நஷ்டம்- யார் குற்றவாளி

BSNL நஷ்டம்- யார் குற்றவாளி? Read | Download

மாநில சங்க அறிக்கை

சுற்றறிக்கை எண்:123- ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை. Read | Download

மத்திய சங்க செய்திகள்

  மாநில சங்க சுற்றறிக்கை எண்:124- மத்திய சங்க செய்திகள்

Read | Download

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

மாவட்டசங்க அறிக்கை 72 [படிக்க]

தொடரும் வெற்றி

        ப்ராஜெக்ட் பிரிவில் இன்று 10-04-2014  நடைபெற்ற சொசைட்டி தேர்தலில் மொத்தம் உள்ள இரண்டு இடங்களையும் நமது BSNLEU சங்கம் கைப்பற்றியுள்ளது .சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் மொத்தம் உள்ள 5 இடங்களில் நமது BSNLEU  சங்கம் 3 இடங்களையும் NFTE மற்றும் FNTO சங்கங்கள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன .

புதன், 9 ஏப்ரல், 2014

கூட்டு போராட்ட குழு


            இன்று கூட்டு போராட்ட குழுவின் பிரதிநிதிகள் நமது CMD அவர்களை சந்தித்து நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க கோரி ஒரு குறிப்பாணையை  சமர்ப்பித்தனர். இன்றைய கூட்டத்தில் தோழர்கள்  P .அபிமன்யு , GS, BSNLEU & கன்வீனர், JAC, தோழர் V.A.N. நம்பூதிரி, President, BSNLEU, தோழர் சந்தேச்வர் சிங், GS, NFTE & தலைவர், JAC, தோழர் ஜெயப்ரகாஷ், GS, FNTO & இணை  கன்வீனர், JAC, தோழர் R.C. பாண்டே , GS, BTEU & பொருளாளர், JAC, தோழர் பவன் மீனா, GS, SNATTA & இணை கன்வீனர், JAC, தோழர்  சுரேஷ் குமார், GS, BSNL MS, தோழர் அப்துஸ் சமத், Dy.GS, TEPU, தோழர் R.K. கோஹ்லி, GS, NFTBE & com. R.S. யாதவ், இணை செயலர், BSNL ATM ஆகியோர் கலந்து கொண்டனர். 
<குறிப்பாணை படிக்க >Click Here

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

திருப்பூர் பிரச்சாரக்கூட்ட புகைப்படங்கள்

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அதிமேதாவிகள்


பிரச்சாரம்

03-04-2014   அன்று  BSNLEU    கூட்டணி சார்பில் பீளமேடு, இராமநாதபுரம்,  D. TAX , கோவை MAIN EXCHANGE , ராம்நகர், டெலிகாம்பில்டிங், சாய்பாபாகாலனி,துடியலூர், கணப்தி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பு இயக்கம் நடைபெர்றது. வாக்கு சேகரிப்பு இயக்கத்தை மாநில உதவி செயலர். தோழர். S.சுப்பிரமணியம், மாநில உதவித்தலைவர் தோழர். V.வெங்கட்ராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.  வாக்கு சேகரிப்பில்  BSNLEU  தலைமையிலான கூட்டணி வேட்பாளார்கள் 15 பேரும் , மாவட்ட தலைவர். தோழர். K. சந்திரசேகரன் மாவட்டசெயலர். தோழர். C. ராஜேந்திரன், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழியர் .மகுடேஸ்வரி, தோழர். P. மனோகரன், தோழர்.P. செல்லதுரை மற்றும்  முன்னனி தோழர்கள். பங்கவல்லி, சூரியகலா, இளம்பரிதி, கலைமதி  ஆகியோரும் பங்கேற்றனர்.  வாக்கு சேகரிக்கும்  கிளையில் உள்ள  கிளை நிர்வாகிகளும் , சங்க முன்னோடிகள், சங்க ஆதரவாளார்கள் என பெண்கள் உட்பட 100 க்கும் மேட்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்