தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

சனி, 20 டிசம்பர், 2014

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்போம் ஒருகோடி கையெழுத்து இயக்கம் துவக்கம்

பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசுக்கு எடுத்துரைக்க ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் வெள்ளியன்று கோவை தொலைத் தொடர்பு துறை அலுவலகத்தில் துவங்கியது. தொலைதொடர்பு நிறுவனத்திலிருந்த பிஎஸ்என்எல் நிர்வாகம் கடந்த 2000ம் ஆண்டு பொதுத்துறையாக மாற்றப்பட்டு கடந்த 9 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக ரூ.40 ஆயிரம் கோடியை லாபமாக ஈட்டித் தந்துள்ளது.
ஆனால், கடந்த 2009, 2010ம் ஆண்டு முதல் பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருவதாக நிர்வாகம் தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் தனியார்மய, நவீன தாராளமய கொள்கைகளினாலேயே தற்போது பிஎஸ்என்எல் நிர்வாகம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கி வந்த சலுகைகள் முற்றிலுமாக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்என்எல் சேவைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதற்கு அடிப்படை காரணமாகியுள்ளது. எனவே மத்திய அரசு பிஎஸ்என்எல்க்கு வழங்க வேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் ஒரு கோடி மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தி பிரதமர் மோடிக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் கோவை, மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள தொலைத் தொடர்புத்துறை அலுவலகத்தில் வெள்ளியன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தை கோவை தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சி.ராஜேந்திரன் வரவேற்றுப் பேசினார். கிளை செயலாளர் மகுடேஸ்வரி நன்றி கூறினார். இதில் அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக