தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

புதன், 15 ஜூலை, 2015

மாவட்ட மையக்கூட்டம்

14-07-2015 அன்று கோவை சங்க அலுவலகத்தில்  நடைபெற்ற மாவட்ட மையக்கூட்டத்தில் கீழ்க்கண்ட ஆய்படு பொருள்களின் மீது  விவாதிக்கப்பட்டன
1)14-08-2015 அன்று பொதுச்செயலர் வருகை
2)FORUM அறைகூவல் அமலாக்கம்
3)ERP -அமலாக்கம்  பணியிட மாறுதல்கள்
4)செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் / நடைபெறவுள்ள மாவட்டச்செயற்குழு
5)தீர்க்கப்படாத பிரச்சனைகள்
முடிவுகள்
1) வாடிக்கையாளர் சேவை மையங்களை வலுப்படுத்துவது
2)உபரியை கணக்கீட்டு - அதிக பாதிப்பில்லாமல் ஆட்குறைப்பு பகுதியில் பயன்படுத்துவது.
3)வாய்ப்புள்ள இடமாறுதல்களை இதில் பெறுவது
4)பொதுச்செயலர் கூட்டத்தை சிறப்புடன் நடத்துவது. அதிக உறுப்பினர்களை திரட்டுவது.
5) FORUM  அறைகூவலை அமலாக்க மேலும் முயற்சி செய்வது
6)ஆகஸ்ட் முதல் வாரத்தில்  மாவட்டச்செயற்குழுவை நடத்துவது
7)பிரச்சனைகளை தீர்க்க நிர்வாகத்தை நிர்பந்தப்படுத்துவது
கூட்டத்தில் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் கே.சந்திரசேகரன்,சி.ராஜேந்திரன்.N.P.ராஜேந்திரன்,P.M,நாச்சிமுத்து,M.மதனகோபாலன்,B.நிசார்,அகமட்P.செல்லதுரை,S.மகேஸ்வரன்,R.R.மணி,M.சதிஸ்,M.முருகன் ஆகியோர் பங்கேற்றார்கள். மாநில சங்க நிர்வாகி தோழர். V.வெங்கட்ராமன் சிறப்புப்பார்வையாளராக பங்கேற்று கருத்துரை தந்தார்.
அன்று மாலை நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் தோழர். கே.சுவாமிநாதன் , தென்மண்டல செயலாளார்.  AIIEA
,  அவர்கள் பங்கேற்ற “ தப்புமா இந்திய வங்கிகள் ? என்ற பொருளில் கருத்துரை வழங்கினார்.  மையக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுடன்  மாவட்ட சங்க நிர்வாகி தோழர்.வி.சம்பத் மற்றும் அரசூர் முருகன், STR கருப்புசாமி, ராம்நகர் கருப்பன், மனோகரன், மருதநாயகம், முருகபூபதி ,ராமநாதபுரம் அன்புதேவன், துடியலூர் ராஜசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக