தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

கோயபல்ஸ் தோழா ! திருந்து இல்லையேல் திருத்தப்படுவாய்





 தன்னை தலைவர் என்று தானே செல்பி எடுத்து விளம்பரம்படுத்தி கொள்ளும் ஒருவர். தான் சார்ந்த  சங்க உறுப்பினர்களையே காட்டி கொடுக்கும்  ஊழியர் விரோத மனோபாவத்தை கொண்டவர். தனது தொழிற்சங்க வாழ்வில் எவ்வித போராட்ட கொள்கையையும் ஊழியர்களுக்காக வகுக்க தெரியாதவர். தனது திறனில்லாத  செயல்பாடின்மையினால் சங்க உறுப்பினர்களே நம்பிக்கை இல்லாத்தீர்மானம் போட்ட பிறகும், எனக்கு செயல்பாடு முக்கியமல்ல ஊழியர்களின் நம்பிக்கை தேவையில்லை  பதவி மட்டும் தான் தனது இலட்சியம் என்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டு செயல்படாமல் இருப்பவர். இடது சாரி ஒற்றுமைகளை சீர்குலைக்க முயன்று வரும் சீர்குலைவுவாதி.   இடதுசாரி சிந்தனை என்றால் என்ன ?  என்ற அடிப்படையில் செயல்படுபவர். ஏற்றி விட்ட தனது சக தொழிற்சங்க தலைவனை   காட்டிகொடுத்து பதவி ஒன்றே முக்கியம் என மாவட்ட செயலர் பதவியை நயவஞ்சமாக பெற்றவர். தனது தொழிற்சங்க வரலாற்றில் தொழிலாளர்களுக்காக செய்த ஒரு சில சாதனைகளையாவது சொல்ல இயலாதவர்.  போராட்டங்களை கொச்சைப்படுத்துவது இவரின் வாடிக்கை . இது அவருக்கு வேண்டும் என்றால் சாதனையாக இருக்கலாம். தோழருக்கு  மனச்சாட்சி ( இருந்தால் ) சொல்லட்டும் தனது நயவஞ்சமாக காட்டி கொடுத்து பெற்ற மாவட்ட செயலர் காலத்தில் ஊழியர்களுக்கு எதையாவது நல்லது செய்தார் என்று.. இல்லை என்றால் தனது ஊழியர் விரோத போக்கை மாற்றிகொண்டு திருந்த முயற்சி செய்ய வேண்டும்.
 மேலும் எந்தவொரு இடதுசாரியும் தன் மேல் நம்பிக்கை இல்லை என்று ஏகமனதாக தீர்மானம் போட்டபிறகும் பதவியில் நீடித்து தொழிற்சங்கத்தை அழித்ததில்லை . ஆனால் இவருக்கோ பதவி மட்டுமே குறிக்கோள் .நம்பிக்கை இல்லாதீர்மானம் படிக்க


2 கருத்துகள்: