தலைவர்கள்

தலைவர்கள்
BSNLEU - கோவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

செவ்வாய், 7 மார்ச், 2017

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்



மகளிர் தின வரலாற்றின்  மிக முக்கிய மூன்று அம்சங்கள்
1910 ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் மார்க்சிய போராளி கிளாரா ஜெட்கின் தலைமையில் நடைபெற்ற சோஷலிஸ்ட் பெண்கள் மாநாட்டுப் பேரணி இது.
‘உலக மகளிர் தினம்’ பற்றி ’1857 மார்ச் 8 சம்பவம்’ என்பது உள்ளிட்ட கற்பனைக் கதைகளே வரலாறு என்று கூறப்பட்டு வருகின்றன. உண்மையான வரலாற்றின் மிக முக்கிய மூன்று அம்சங்கள் வருமாறு :
1910 ம் ஆண்டில், டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகனில் ’ உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு ‘ நடைபெற்றது. மார்க்சியவாதியான கிளாரா ஜெட்கின் தலைமை தாங்கினார். கிளாரா ஜெட்கின் உள்ளிட்ட தோழர்கள் சிலரின் முன்மொழிவின்படி ‘மகளிர் தினம்’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "அனைத்துத் தேசிய இனங்களையும் சேர்ந்த சோஷலிஸ்ட் பெண்கள், ஒரு தனிச் சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சமூகப் பிரச்சனைகள் பற்றிய சோஷலிசக் கண்ணோட்டத்துடன், பெண்கள் பிரச்சனை முழுவதுடனும் வாக்குரிமைக் கோரிக்கையை இணைத்து, விவாதிக்க வேண்டும்" என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது. அதன்படி அடுத்த ஆண்டு முதல் பல்வேறு தேதிகளில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
1917 மார்ச் 8 அன்று ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் புரட்சியைத் தொடங்கினார்கள். மற்ற உழைக்கும் மக்களும் இணைந்தார்கள். லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவாகக் களம் இறங்கின. எட்டு நாட்களில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டது. இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. நவம்பர் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் உலகின் முதல் சோஷலிஸ்ட் புரட்சி நடந்து, லெனின் தலைமையில் புதிய அரசு அமைந்தது. எல்லார்க்கும் எல்லாம், ஆண்-பெண் சமத்துவம் என்ற நிலை பெருமளவில் நிலைநாட்டப்பட்டது.
1921 ம் ஆண்டில் ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலத்தின்’ மாநாடு மாஸ்கோவில் நடந்தது. ரஷ்யப் பெண் தொழிலாளர்கள் 1917 மார்ச் 8 அன்று தொடங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சியை நினைவு கூறும் வகையில், இனிமேல் மகளிர் தினத்தை நிரந்தரமாக மார்ச் 8 அன்று நடத்துவது என்று மாநாடு முடிவு செய்தது. அது முதல் மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக